தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

உளுந்தூர்பேட்டை மாநில மாநாட்டை முன்னிட்டு தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் தீவிர பிரச்சாரப் பயணம்

தாராபுரம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், வரும் 17.08.2026 அன்று விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டில் பொதுமக்களும், கட்சித் தொண்டர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென வலியுறுத்தி, தாராபுரம் தொகுதியில் இன்று தீவிர பிரச்சாரப் பயணம் நடைபெற்றது.

தாராபுரம், மூலனூர், குண்டடம், அலங்கியம், தளவாய்பட்டினம், பொன்னாபுரம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் கிராமங்களில் பிரச்சார வாகனம் மூலம் பொதுமக்களை நேரில் சந்தித்த நிர்வாகிகள், மாநாட்டின் நோக்கங்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கி துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

இந்த வாகன தெருமுனைப் பிரச்சாரம், ஈரோடு நாடாளுமன்ற கலை இலக்கியப் பேரவை சார்பில், மாநில துணைச் செயலாளர் திருமா ரகு ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. மாநில கலை மற்றும் கலைப்பிரிவு ஒருங்கிணைப்பாளரான திருமா ரகு தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்தில், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று, மாநாட்டில் திரளான மக்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர்.

மேலும், சமூக நீதி, சமத்துவம், ஜனநாயக உரிமைகள் மற்றும் மக்களின் நலன் தொடர்பான கருத்துகளை எடுத்துரைத்து, மாநில மாநாட்டின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் தொகுதி முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பொறியாளர் அணி மாநில துணைச் செயலாளர் ஆனந்தராஜ், மண்டல துணைச் செயலாளர்கள் ஓவியர் மின்னல், தமிழ்முத்து, பொது நிர்வாக மாவட்டச் செயலாளர் முருகவேல், விடுதலை இயக்கம் மகளிர் மாவட்டச் செயலாளர் சுமதி, இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் சிறுத்தை சிரஞ்சீவி, மகளிர் அணி மாவட்டச் செயலாளர் சிறுத்தை சுமதி, நகர பொறுப்பாளர் அருண் சாரதி, இளைஞர் அணி நகரச் செயலாளர் வளவன் வினோத், மாவட்ட துணைச் செயலாளர் சுப்பிரமணி, கலை இலக்கியப் பேரவையைச் சேர்ந்த ரோஹித் ராஜ், விசாகன் கனகராஜ், பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *