தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில், நெல்லை ஆர்த்தோ கிளப் எலும்பு முறிவு மருத்துவர்கள் சார்பாக, ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நீண்ட நேரம் வாகனம் ஓட்டுபவர்கள் உடல் நிலையை சரியாகப் பராமரித்து, இடையிடையே ஓய்வு எடுத்து, தினசரி உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் எலும்பு மற்றும் மூட்டு பிரச்சினைகளைத் தவிர்க்கலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பின்னர் இரு சக்கர வாகன ஓட்டிகள், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றி விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆட்டோ, பேருந்து ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.