தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் 11வது பகுதி ஸ்ரீ மது நந்தவன காளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விக்னேஸ்வர பூஜை, சூர்யா பூஜை உடன் தொடங்கிய இவ்விழாவானது கடம் புறப்பாடு விமான கும்பாபிஷேகம், யாத்திர தானமும் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு தீபாரதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து காலை 11 மணிக்கு மேல் அன்னதானம் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் தலைவர் சிவக்குமார், செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் ராமசாமி, துணைத்தலைவர் முருகேசன், துணைச்செயலாளர் சிவகுருநாதன் மற்றும் கோயில் நிர்வாகஸ்தர்களும், பொதுமக்களும், பக்த கோடிகளும் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ மது நந்தவன காளியம்மன் அருளை பெற்றுச் சென்றனர்.