பாஜகவின் இளைஞரணி மாநில இணைப் பொறுப்பாளராகப் பதவி வகித்து வரும் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த கிருஷ்ணகுமார் நாகராஜன், தனது சொந்தக் கட்சியின் கூட்டணியில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு எதிராகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் சார்ந்த சமூகத்தை சேர்ந்த பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் அவர் தவெகவுக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார். மேலும், நடிகர் விஜயின் ‘தவெக’வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அவர் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 20,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் சிதறடிக்கப்படக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. கூட்டணி கட்சிகளால் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று அவர் கருதுவதே, அவர் இம்முடிவை எடுத்ததற்கான காரணம் என அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *