மன்னார்குடி., ஏப்ரல்.07

தமிழக 17வது சட்டமன்ற தேர்தல் வருகிற 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் எஸ் காமராஜ் மன்னார்குடி அருகே உள்ள மூவாநல்லூரில் வீடு வீடாக சென்று குக்கர் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது வழிநெடுகிளும் பொதுமக்கள் பூரண கும்ப மரியாதை அளித்து அமுமுக வேட்பாளரை வரவேற்றனர் அப்போது பேசிய அமமுக வேட்பாளர் கூட்டணி கட்சியினர் எனக்கு மிக சிறப்பான வரவேற்பை கொடுத்துள்ளீர்கள்.

இது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனால் இந்த பகுதியில் இருக்கும் ஒவ்வொருவருமே சட்டமன்ற உறுப்பினர் தான் . இரண்டு முறை வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கின்ற எனக்கு நீங்கள் கொடுக்கிற வரவேற்பு ஆறுதலாக இருக்கிறது.

நிச்சயமாக குக்கர் சின்னம் வெற்றி பெறும் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக வருவார்கள் நான் சட்டமன்ற உறுப்பினராக வர வேண்டும். அதற்கு நீங்கள் குக்கர் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய ஆதரவு தர வேண்டும் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *