தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் போட்டியிடுகிறார். இன்று பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட ஜாலியூர், நடூர், நத்தமேடு, மோட்டாங்குறிச்சி, தேக்கல்நாய்க்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு, பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த பகுதியில் கல்வி வளர்ச்சிக்காக கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளை நான் உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த போது கொண்டு வந்தேன். மீண்டும் உங்களுக்கு சேவையாற்ற வந்துள்ளேன் என உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். இந்த பிரச்சாரத்தில் திமுக, விசிக, காங்கிரஸ், தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.