சென்னை, திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 750 க்கும் அதிமான மாணவ – மாணவியர் படிக்கின்றனர். இங்கு, கல்லுாரி படிப்பினை முடித்த மாணவர்களுக்கான, வேலை வாய்ப்பு முகாம், கல்லுாரி வளாகத்தில், நடந்தது.

கல்லுாரி நிர்வாகம் – மேஜிக் பஸ் நிறுவனம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட, வேலைவாய்ப்பு முகாமில், விப்ரோ, வி 4 யு உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்ட நேர்காணலில், முன்னாள் மாணவர்கள் உட்பட, 300 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

அதன்படி, நேர்காணலில் பங்கேற்ற மாணவர்களில், இளங்கலை வணிகவியல் மாணவியர் ராஜஸ்ரீ, விஜயலட்சுமி, யோக பிரியா, இளங்கலை ஆங்கிலம் பாடப் பிரிவு மாணவி சரஸ்வதி, மாணவர் முகமது ஜமீர் உட்பட, 181 பேரை நிறுவனங்கள் தேர்வு செய்தனர்.

அவர்களுக்கான பணி ஆணையை, கல்லுாரி முதல்வர் விஜயா, பேராசிரியர் சீனிவாசன், வேலைவாய்ப்பு அதிகாரிகள் புனிதகுமாரி, தாட்சாயிணி, பவித்ரா, நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பத்மபிரியா மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள், தேர்வான மாணவ – மாணவியருக்கு வழங்கினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *