தேனி மாவட்டம் கம்பம் நகரில் அண்ணா திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்திற்கு பாஜக மாவட்ட தலைவர் பி.இராஜபாண்டியன் தலைமை தாங்கி எதிர்வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் மாவட்டத்தில் அண்ணா திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்
இந்த கூட்டத்தில் தேனி மாவட்ட வேட்பாளர்கள் கம்பம் எஸ்.டி.கே.ஜக்கையன் போடி வி.டி.நாரயணசாமி ஆண்டிபட்டி ஆ.லோகிராஜன் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.