எ.பி.பிரபாகரன்
பெரம்பலூர்
செய்தியாளர்.
நாடாளும் மக்கள் கட்சியின் குன்னம் தொகுதியின் வேட்பாளராக இளங்கோவனின் வேட்புமனு உட்பட 21 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பெரம்பலூர். ஏப்.07. தமிழகத்தில் சட்ட மன்ற பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் தங்களது கட்சி சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்து வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், நாடாளும் மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜெ. அக்னி செல்வராஜ், அவர் கட்சி சார்பில் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து இருந்தார். அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்டமன்ற பொது தொகுதியின் வேட்பாளராக அக் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் நல்லறிக்கை ந.கி. இளங்கோவன் என்பவரை அறிவித்திருந்தார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இளங்கோவனின் கடந்த இரண்டாம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். குன்னம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சரன்யா, திமுக சார்பில் சிவசங்கர், நாம் தமிழர் கட்சி சார்பில் கீர்த்தி வாசன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரேவதி நாடாளு மக்கள் கட்சியின் சார்பில் இளங்கோவனின் வேட்பு மனு உட்பட 21 பேரில் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இளங்கோவன் கடிகார சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அமரர் ராமசாமி உடையாரின் ஆசியோடு தற்போது தொகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் தமது ஆதரவாளர்களுடன் பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் தொகுதியில் தான் சார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்களுடன் நெருக்கமாக இருக்கும் தான், வெற்றி பெற்றால் குன்னம் தொகுதியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வருவதற்கு பாடுபடுவேன் என்கிறார் இளங்கோவன்.