கம்பம் ஆர் ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் பவுண்டர்ஸ் தினம் தேனி மாவட்டம் கம்பம் ஆர் ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் பவுண்டர்ஸ் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயல் தலைவர் ஆர்.ஆர் ஜெகதீஷ் தலைமை தாங்கினார். பள்ளியின் துணைத் தலைவர் ஆர் அசோக் குமார் பள்ளியின் இயக்குனர்கள் ஆர்.ஜெயந்தி ஏ. ரேணுகா ஜெ. கிருத்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி நிறுவனர் பிறந்த நாளையொட்டி 75 கிலோ கேக் வெட்டி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும் மாணவ மாணவர்களுக்கு பல்வேறு கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் முதல்வர் டாக்டர் பி. ஆனந்தவள்ளி நன்றி கூறினார்.