எ.பி.பிரபாகரன்
பெரம்பலூர்
செய்தியாளர்.

பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் இளம்பை. தமிழ்ச்செல்வன் கிராமம் கிராமமாக‌ சென்று கூட்டணி கட்சிகளோடு வாக்கு சேகரித்தார்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்காக அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில், பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அந்த வகையில் வாலி கண்டபுரம், அனுக்கூர், பிரம்மதேசம், வல்லாபுரம், முல்லை நகர், தம்பை, தேவையூர், ரஞ்சன்குடி, மங்களம், மங்களமேடு, எறையூர், எறையூர் காலனி, நரிக்குறவர் காலனி, சர்க்கரை ஆலை, புது குடியிருப்பு போன்ற கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ரஞ்சன்குடியில் வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் பொதுமக்களிடம் பேசும்போது ஏற்கனவே 10 வருடங்களில் தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை செய்து முடித்ததாகவும், குறிப்பாக ரஞ்சன்குடியில் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு பட்டா குடியிருப்பு வழங்குவதற்கு ஏற்பாடு செய்த போது அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டதாகவும், விரைவில் அதிகாரத்துக்கு வந்த பிறகு உடனடியாக பட்டா வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவேன் என்றும் கூறினார்.

வாலிகண்டபுரத்தில் வேட்பாளர் இளம்பை. இரா.தமிழ்ச்செல்வன்பொது மக்களிடம் பேசும்போது அதிமுக ஆட்சி அமைத்ததும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவித் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா குளிர்சாதனப்பெட்டி (பிரிட்ஜ்) வழங்கப்படும் என்றும், நெல் உற்பத்தியில் விவசாயிகளின் நலனுக்காக குவிண்டால் ஒன்றுக்கு 3500 ரூபாய் என நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கரும்பு உற்பத்தியில் விவசாயிகளின் நலனுக்காக கரும்பு டன் ஒன்றுக்கு 4500 ரூபாய் என நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு 7.5 சதவீதத்திலிருந்து 10% வழங்கப்படும் என்றும், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் பேசினார்.

மேலும் அதிமுக வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச் செல்வனுடன் கூட்டணி கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, ஜான் பாண்டியன் தலைமையிலான கட்சியைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். சென்ற இடமெல்லாம் வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு தந்ததை பார்க்க முடிந்தது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *