காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே நந்தம்பாக்கம் பகுதியில், தாம்பரம் பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச தொழிற்கல்வியை வழங்கும் வகையில் ரூபாய் ஐந்து கோடி மதிப்பீட்டில்
புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனராக சைலேந்திரபாபு ஐபிஎஸ் பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்து புதிய நிர்வாகிகளை கௌரவப்படுத்தினார்.
புதிய அலுவலகத்திற்கான கட்டுமான பணிகளுக்காக 5 லட்சம் ரூபாய் நன்கொடை பில்டர்ஸ் அசோசியேஷன்க்கு வழங்கப்பட்டது.
சங்கத்தின் புதிய தலைவராக திரு சுப்பிரமணியன், துணைத் தலைவராக திரு கருணாநிதி உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் மற்றும்
அகில இந்திய முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட அகில இந்திய முன்னாள் பில்டர்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்