பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், தர்மபுரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான முனைவர் பெ. பழனியப்பன் (புதன்கிழமை) பொ. மல்லாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பல்வேறு இடங்களில் சென்று உதயசூரியன் சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
“பொ. மல்லாபுரம் பேரூராட்சி மக்களின் அடிப்படைத் தேவைகளான தங்கு தடையற்ற குடிநீர் வசதி, முறையான சாலை வசதிகள் மற்றும் தெருவிளக்கு வசதிகள் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும்.
மு.க. ஸ்டாலின் அவர்களின் மக்கள் நலத் திட்டங்கள் தங்கு தடையின்றி ஒவ்வொரு வீட்டிற்கும் வந்து சேர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் தங்களின் உற்சாகமான ஆதரவை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் பேரூராட்சி கழக நிர்வாகிகள், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தோழர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.