தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் (101) தொகுதி: வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கு தாக்கல் அவசியம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (101) தனி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், மக்கள் பிரதிநிதித்துவம் சட்டம் 1951 பிரிவு 77(1)ன் படி தங்களது தேர்தல் செலவுகளை முறையாக பதிவு செய்து குறிப்பிட்ட தேதிகளில் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு பதிவேட்டினை கீழ்க்கண்ட தேதிகளில் முற்பகல் 10 மணிக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக ஏப்ரல் 11, இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 16, இறுதி கட்டமாக ஏப்ரல் 30 ஆகிய தேதிகளில் கண்காணிப்பு நடைபெறும். இந்த கூட்டங்களில் தாராபுரம் தொகுதி தேர்தல் அதிகாரி மற்றும் திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் (மாவட்ட ஆட்சியர்) முன்னிலையில் செலவு கணக்குகள் ஆய்வு செய்யப்படும்.

வேட்பாளர்கள் தங்களது செலவுகளை முறையாக பதிவு செய்து, குறிப்பிட்ட தேதிகளில் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இதனை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *