தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தமிழகத்தில் நூறு சதவீதம் வாக்கு அளிக்க வலியுறுத்தி ஒருவிரல் புரட்சி தாராபுரத்தில் கோட்டாட்சியர் காவல்துறை அதிகாரிகள் ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது அதை ஒட்டி தமிழகம் முழுவதும் 100% வாக்கு அளிக்க வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர் கோட்டாட்சியர்கள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள் இந்நிலையில் இன்று தாராபுரத்தில் கோட்டாட்சியர் பிலிப்ஸ் ராஜா மற்றும் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் போக்குவரத்து ஆய்வாளர்கள் ஜசினி ஆகியோர் முன்னிலையில் மகாராணி கல்லூரி 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்று ஒரு விரல் புரட்சி பதாகையுடன் விழிப்புணர்வை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி 100% வாக்களிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டு ஊர்வலத்தில் கோசங்கள் எழுப்பப்பட்டது
அப்போது என் வாக்கு என் கையில் போன்ற கோசங்களும் இதில் பதாகை ஏந்தி அனைவரும் 23ஆம் தேதி வாக்களிக்க வேண்டும் என்றும் ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர் இந்த நிகழ்வில் எலெக்சன் அதிகாரிகள் காவல்துறையினர் கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் உடன் தாராபுரம் காவல்துறையினர் 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.