கோவையில் கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவையினரின் ஆலோசனை கூட்டம் காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது…
பேரவையின் மாநில தலைவர் தேவராசன் தலைமையில் நடைபெற்ற இதில் வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேவராசன், கடந்த 2021-ம் ஆண்டு முதல் திமுகவோடு கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவையினர் கூட்டணி வைத்துள்ளதாகவும், தொடர்ந்து திமுக கூட்டணியை தாங்கள் ஆதரிப்பதாகவும் தெரிவித்தனர்.
இலவச மின்சாரம்,இட ஒதுக்கீடு, தீரன் சினமலைக்கு சிலை, உக்கடம் மேம்பாலத்திற்கு தங்கள் மூத்த தலைவர் சுப்ரமணியத்தின் பெயர் என கொங்கு வேளாளகவுண்டர் சமுதாயத்திற்கு தொடர்ந்து தி.மு.க.தலைமையிலான ஆட்சியில் நலத்திட்டங்களை செய்து வருவதாக தெரிவித்தார்.
தற்போதைய தேர்தல் அறிக்கையில் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தி.மு.க.தேர்தல் அறிக்கை வெளிப்படுத்துவதாக கூறிய அவர், குறிப்பாக இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்படாத நவீன மின்சாரம் பம்ப் செட்கள் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக கூறினார்..
இதனால், தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்படுவதோடு கோவையில் பம்ப்செட் தொழில் மேம்பட வாய்ப்புள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்…