எபி பிரபாகரன், பெரம்பலூர், செய்தியாளர்.

ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் வாக்கு சேகரிப்பு.

பெரம்பலூர்.ஏப்.09. பெரம்பலூர் சட்டமன்ற தனி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா, தமிழ்ச்செல்வன் நான்காவது முறையாக போட்டியிடுகிறார்.
பெரம்பலூர் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கூட்டணி கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சியினரேடு கடந்த சில நாட்களாக வாக்காளர்களை சந்தித்து ஓட்டு சேகரித்து வருகிறார்.

அந்த வகையில் வேட்பாளர் தமிழ்ச்செல்வன் இன்று ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மங்கூன், சிறுவயலூர், புதுவிராலிப்பட்டி, பழைய விராலிப்பட்டி, புது அம்மாபாளையம், ஈச்சம்பட்டி, நக்கசேலம், அடைக்கம்பட்டி, எலந்தபட்டி போன்ற கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

வாக்காளர்களிடம் பேசும்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன்ஈ பிளஸ் டூ வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் மீன்பிடி தடை காலங்களில் வழங்கும் நிவாரணம் ரூபாய் 8000-ல் இருந்து துபாய் 12000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் ஆயிரம் யூனிடத்திலிருந்து 1400 யூனிட்டாக உயர்த்தப்படும் என்றும் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து துபாய் ஆயிரம் வழங்கப்படும் என்றும் கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் முன்னுரி யூனிட்டில் இருந்து 450 யூனிட் ஆக அதிகரிக்கப்படும் என்றும் நடைபாதை வியாபாரிகள் பெற்ற கூட்டுறவு வங்கிக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் அதனால் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

மேலும் அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் ரூபாய் 2000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும், அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கு 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்றும், ஆண்களுக்கும், மகளிர்க்கும் கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்றும், 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், அனைவருக்கும் வீடு, அம்மா இல்லம் இலவச திட்டம் நடைபெற படுத்தப்படும் என்றும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் வாழ்வாதார உதவியாக வழங்கப்படும் என்றும், ஜல்லிக்கட்டு போட்டிகளில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும் என்றும், மாணவர்களுக்கு கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், முதியோர் உதவித்தொகை ரூபாய் 2000 ஆக உயர்த்தப்படும் என்றும், ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும் என்றும், மாற்றுத்திறனாளிகளுக்காக கூட்டுறவு வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும், சிறுபான்மை சமுக பெண்களுக்கு சுய தொழில் தொடங்க வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்றும் பேசினார்.

மேலும்  நக்கச் சேலம் கிராமத்திற்குச் சென்ற  வேட்பாளர் இளம்பை. இரா.தமிழ்ச்செல்வனுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். 

அங்கு வாக்காளர்களிடம் பேசும்போது ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்கனவே 10 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக தான் பதவியில் இருந்தபோது என்னென்ன நலத் திட்டங்கள் வழங்கப்பட்டது என்பதையும் நினைவு படுத்தி பேசினார். வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் சென்ற இடமெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர்கள் தூவியும் வரவேற்றதை பார்க்க முடிந்தது.

மேலும் வேட்பாளரோடு கூட்டணியை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுகவை சேர்ந்த மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *