தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

ஊதியூர் அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் இறங்கியது – 36 பயணிகள் உயிர் தப்பினர்.

ஈரோட்டில் இருந்து 36 பயணிகளுடன் பழனி நோக்கி சென்ற TTS தனியார் பேருந்து, இன்று காங்கேயம் – தாராபுரம் சாலையில் விபத்துக்குள்ளானது.

இந்த பேருந்தை ஓட்டுனர் பிரகாஷ் (40) இயக்கி வந்த நிலையில், ஊதியூர் முதலிபாளையம் பிரிவு அருகே முன்னே சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலது புற பள்ளத்தில் இறங்கியது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 36 பேரும் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர். இதனால் பெரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.

இதற்கிடையில், அப்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் மு.பெ. சாமிநாதன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து, விபத்து குறித்து அதிகாரிகளிடம் விசாரித்து, பயணிகளுக்கு ஆறுதல் கூறினார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிய பரபரப்பை ஏற்படுத்தியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *