ஈரோடு காங்கிரஸ் மண்டலத் தலைவர் ஜாபர் சாதிக் 38 வருட காங்கிரஸ் காரர் கட்சி மேலிடம் அவரை கண்டுக்க வில்லை. த.வெ.க. விஜய் கட்சி க்கு செல்வதாக பேட்டி…

ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் கடந்த 38 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார் மேலும் அவர் ஒருமுறை மாமன்ற உறுப்பினராகவும் அவரது மனைவி இரண்டு முறை மாமன்ற உறுப்பினராகவும் காங்கிரஸ் சார்பாக பொறுப்பு வைகித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கிழக்கு மாவட்டத்திற்கு வெளியூர் காரர் கோபிநாத் பழனியப்பன் என்பவரை வேட்பாளராக காங்கிரஸ் தலைமைக் கழகம் அறிவித்திருந்தது அதனை வன்மையாக கண்டித்து ஜாபர் சாதிக், மக்கள் ராஜன் உட்பட பல காங்கிரஸ் நிர்வாகிகள் தனது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அவ்வாறு இருக்க ஜாபர் சாதிக் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு தன்னை வேட்பாளராக முன்னிறுத்தி வேட்பு மனுவையும் தாக்கல் செய்திருந்தார் இவ்வாறு செய்தால் அப்படியாவது காங்கிரஸ் தலைமை தன்னிடம் பேசும் என்ன ஏது என்று கேட்கும் என்ற எண்ணத்தில் மட்டுமே அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார் ஆனால் தற்போது வரை 38 ஆண்டுகால காங்கிரஸில் பணியாற்றியமைக்கு. மதிப்பளிக்காமல் அவரிடம் இதுவரை காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பேசவில்லை இதனால் ரொம்ப மன வருத்தமான ஜாபர் சாதிக் தனது 38 ஆண்டுகால காங்கிரசுக்கு செய்த உழைப்பை எண்ணி வருந்தியதுடன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

மேலும் அவர் கூறுகையில் வரும் காலங்களில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளர் திரு விஜய பாலாஜி முன்னிலையில் தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டார். மேலும் அவர் வருகின்ற தேர்தல் பணிகளை தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் திரு விஜய பாலாஜி அவர்களுடன் இணைந்து அவரின் வெற்றி க்கு பாடுபடுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கிழக்கு மாவட்ட செயலாளரும் கிழக்கு மாவட்ட வேட்பாளருமான விஜய பாலாஜி அவருக்கு பொன்னாடை அணிவித்து த.வெ
க. வின் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *