தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி.

குண்டடம்,தாராபுரம்
சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு 100% வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில், குண்டடம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணி குண்டடம் பேரூராட்சி அலுவலகம் முதல் குண்டடம் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. மொத்தம் 112 பேர் கலந்து கொண்டு, வாக்களிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பேரணியில் குண்டடம் நில வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் சௌந்தரராஜன், ருத்ராவதி பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், குண்டடம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜா மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அருள்முருகன், சந்துரு, சிவபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு பேரணி மூலம், வரவிருக்கும் தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *