தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் 9940337853

தாம்பரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர், சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் அவர்களை ஆதரித்து பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திறந்த வேனில் இரட்டை இலை சின்னத்திற்கு முன்னாள் அமைச்சரும் தொகுதி பொறுப்பாளர் மாண டி.கே.எம் சின்னையா முன்னாள் எம்எல்ஏ ப.தன்சிங் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

உடன் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி சேர்ந்த நிர்வாகிகள் அமமுக மாவட்ட செயலாளர் மா.கரிகாலன், பாஜக தொகுதி இணைப் பொறுப்பாளர் சுபாஷ் குமார், பாமக மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் கருப்புசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சி சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு வாகன அணி வகுப்புடன் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் வீதி வீதியாக சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *