பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பி, பழனியப்பன் தொகுதி முழுவதும் கடந்த நான்கு நாட்களாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களையும் கட்சியினரையும் சந் தித்து வாக்கு சேகரித்து வருகிறார்

வியாழக்கிழமை தனது சொந்த ஊரான மோளையானூர் பகுதியில் காலை முதலே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் மண்ணின் மைந்தன் என்பதால் அப்பகுதி மக்கள் ஒன்று கூடி மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, தாரை தப்பட்டை முழங்க சிறப்பான வரவேற்பு கொடுத்த னர் அப்போது இந்தப் பகுதிக்கு தான் கொண்டு வந்த நல்ல திட்டங்களை எடுத் துரைத்து வாக்கு சேகரித்தார், கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக அரசு மக்களுக்கு கொண்டு வந்த சிறப்பு திட்டங்கள் குறிப் பாக மகளிர் உரிமைத் தொகை, வீடு தேடி முதியவர்களுக்கு ரேஷன் பொருள் வழங் குதல், கல்வியில் சிறப்புகவனம் செலுத்தி ஊக்கத்தொகை, கட்டணம் இல்லா மக ளிர் பேருந்து பயண திட்டம் என திமுக

அரசின் அடுக்கடுக்கான நலத்திட்டங் களை பொதுமக்களுக்கு நினைவு கூர்ந் தார்

மேலும் தாம் வெற்றி பெற்று வந்தால் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகு திக்கு உட்பட்ட பகுதிகளில் கொண்டு வரக்கூடிய வளர்ச்சி திட்டங்கள் தர்மபுரி மாவட்டத்திற்கான வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவர தம்மை பாப்பிரெட்டிப் பட்டி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெ டுக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்க ளிக்கவேண்டும்எனகேட்டுக்கொண்டார்

மோளையானூர், வெங்கட் சமுத்திரம், முள்ளிக்காடு, தேவராஜபாளை யம்,பையர் நத்தம், பி,பள்ளிப்பட்டி என 40 க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் வாக்காளர்களை சந் தித்து வாக்கு சேகரித்தார்

வாக்கு சேகரிப்பின் போது தோழமைக் கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், தேமுதிக, கொங்கு நாடு மக்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட் சியினர் உடன் சென்று வாக்கு சேகரித்த னர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *