தஞ்சாவூர்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களான கும்பகோணம் சாக்கோட்டை க. அன்பழகன்,திருவிடைமருதூர் கோவி.செழியன், பாபநாசம்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்,ஏ.எம். ஷாஜகான் திருவையாறு துரை.திருவையாறு ,தஞ்சாவூர் சண். இராமநாதன் ,ஒரத்தநாடு ஆர். வைத்திலிங்கம், பட்டுக்கோட்டை அண்ணாதுரை ,பேராவூரணி என். அசோக்குமார் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாடு அரசு நெல்லுக்கு வழங்கி வரக்கூடிய ஊக்கத்தொகையை மறு பரிசீலனை செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டார். நான்காண்டு காலம் முதலமைச்சராக இருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நெல்லுக்கான ஊக்க தொகையை உயர்த்தி தரவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார் தொடர்ந்து திமுக இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் நெல் குவிண்டால் ஒன்றிற்கு 30500 வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.


முதியோர் மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்ற பெண்களுக்கு வழங்குகின்ற உதவித்தொகைகளையும் இரண்டு மடங்காக உயர்த்துவோம்,
டெல்டா விவசாயிகளுக்கு பயன்படக்கூடிய வகையில் நவீன மின்சார பம்பு செட்டுகள் கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4500 ஆக உயர்த்தப்படும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் கலைஞர் கனவு இல்ல திட்ட மூலம் ஈடற்ற ஏழைகளுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும். வெண்ணாறு, வெட்டாறு பிரியும் தென்பபெரம்பூரில் புதிய பாலம் கட்டப்படும். ஈச்சங்கோட்டை முதல் வெட்டிக்காடு வரை கல்லணை கால்வாய் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகலப்படுத்தப்படும் தஞ்சாவூர் மண்டல அளவிலான உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் தஞ்சாவூரில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் உணவு பதப்படுத்துதல் குழுமம் பட்டுக்கோட்டையில் வேளாண் தொழில் பூங்கா அமைக்கப்படும்.


தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் உலர் கலத்துடன் கூடிய நிரந்தர கட்டிடங்களாக கட்டித் தரப்படும்.
அடுத்த 30 ஆண்டுகளுக்குள்ளான குடிநீர் தேவையும் வேளாண்மை மற்றும் தொழிற்சாலைகளுக்கான தேவைகளையும் கணக்கிட்டு அதை நிறைவு செய்யக்கூடிய வகையில் தமிழ்நாடு நீர் பாதுகாப்பு செயல் திட்டம் உருவாக்கப்படும் டெல்டா மாவட்டங்களில் 10 ஆயிரத்து 500 km நீளத்திற்கு சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை தூர்வார பணிகள் மேற்கொள்ளப்படும்.


நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் உலர்த்திகள் அமைக்கப்படும் என்று பேசினார் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் விமர்சித்து பேசிய மு க ஸ்டாலின் தமிழ்நாட்டை தலைசிறந்த நாடாக மாற்ற ஓய்வில்லாமல் உழைக்க தயாராக இருப்பதாக கூறிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணம் பலிக்காது என்று கூறினார். திமுக இரண்டாவது முறை ஆட்சி அமைக்காது என்று கூறிவரும் எதிர்க்கட்சிகளின் எண்ணம் நிறைவேறாது என்றார்.

இக்கூட்டத்தில் திமுக பொருளாளர் டி ஆர் பாலு,திமுக முதன்மை செயலாளர் கே என் நேரு மற்றும் கூட்டணி கட்சியை நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *