கும்பகோணம் தொகுதி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
கும்பகோணம் தொகுதிக்கு உள்பட்ட கள்ளப்புலியூர், கோவிலாச்சேரி,கல்லூர் , தேவனாஞ்சேரி, நீலத்தநல்லூர் அத்தியூர், உததமதாணி,குமரங்குடி, ஆகிய பகுதிகளில் தொகுதி திமுக வேட்பாளா் சாக்கோட்டை க.அன்பழகன் வீதி வீதியாக சென்று பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.
அப்போது, தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்றது. முதல்வா் ஸ்டாலின் கல்வித்துறையில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி புரட்சியை ஏற்படுத்தினாா். மகளிா் உரிமைத்தொகை, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முறையாக செயல்படுத்தினாா். மேலும், கள்ளப்புலியூர் ஊராட்சியில் பல்வேறு பகுதியில் தாா்ச்சாலை, சிமென்ட் சாலை, புதிய நியாயவிலைக் கடை கட்டடங்கள், , ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆட்சி தொடர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டுமென கேட்டுக்கொண்டாா்.
வாக்குசேகரிப்பு நிகழ்வில் திமுக விசிக , மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் ,தொண்டர்கள் கலந்து கொண்டனா்