திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்
ஏப்ரல் 11
தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருவாரூர் சட்டமன்றத் தொகுதி திருவாரூர் ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,
நமது வெற்றி வேட்பாளர் பூண்டி கலைவாணன் அவர்களுக்கு உதயசின்னத்தில் வாக்குகளை கேட்டு காலை 7:00 மணி முதல் தண்டலை,கீழக்காவாதுகுடி, நடப்பூர், செருகுடி, வைப்பூர், திருவாதிரைமங்கலம், ஆமூர், ஓடாசேரி, பழையவலம்,
போன்ற பகுதிகளில் சூறாவளியாய் சுழன்று வாக்குகளை சேகரித்தனர்,
உழைக்கும் கருவிகளாய் மட்டுமே பார்க்கப்பட்ட பெண்ணினத்தை, சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நடக்கும் அளவுக்கு உயர்த்திட, மகளிர்சுய உதவிக்குழுக்கள் , மகளிர் விடியல் பயண கட்டனமில்லா பேருந்து பயணம் , மகளிர் இட ஒதுக்கீடு , குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை தந்த தமிழ்நாடு முதல்வர் திராவிட நாயகர் அவர்களின் சாதனைகளை எடுத்துச் சொல்லி திருவாரூர் ஊராட்சி பகுதிகளில் திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளருமான பூண்டி. கே. கலைவாணன் அவர்களுக்கு வாக்கு சேகரித்து பிரச் சாரம் மேற்கொண்டார்.அதில் திரளான திருவாரூர் ஒன்றிய மதிமுகவினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,