நூறு சதவீதம் ஓட்டு பதிவை வலியுருத்தி அரசு ஆசிரியர்கள் பேரணி.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் அரசு ஆசிரியர்கள் சார்பில், 100 சதவீத ஓட்டு பதிவை உறுதி செய்யும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வட்டாரக் கல்வி அலுவலர் கலாராணி பேரணியை துவக்கி வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோகுலகிருஷ்ணன், ஆசிரியர் பயிற்றுநர் சாஜிதாபானு முன்னிலை வகித்தனர்.
பேரணி பேராவூரணி கிழக்கு தொடக்கப்பள்ளியில் தொடங்கி, முதன்மை சாலைகள் வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடைந்தது. வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்ற விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பியவாறு சென்றனர். இதில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன் .