கூவத்தூர் கிராமத்தில் அதிமுக வேட்பாளர் இராஜசேகருக்கு புரட்சி பாரதம் கட்சி சிறப்பான வரவேற்பு
கல்பாக்கம் ஏப் 12
நடைபெற உள்ள தமிழக சட்ட மன்றத் தேர்தலில் செய்யூர் சட்ட மன்ற தொகுதி (தனி) அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பெரும்பாக்கம் இராஜசேகர் செய்யூர் வட்டம் கூவத்தூர் மற்றும் நாவக்கால் கீழார் கொல்லை பஜார் வீதி மலையூர் பகுதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம எஸ் ஆறுமுகம் தலைமையில் தீவீர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
இதில் புரட்சி பாரதம் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கே.பி சகாதேவன் மாவட்ட இணை செயலாளர் கே. எஸ் இராமச்சந்திரன் உட்பட தொண்டர்கள் ஏராளமானோர் உடன் சென்றனர் முன்னதாக வேட்பாளர் இராஜசேகருக்கு பட்டாசு வெடித்தும் பெண்கள் ஆரத்தி எடுத்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்