நாமக்கல் M.கார்த்திக்ராஜா.
மோகனூர்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அண்ணா திமுக ஆட்சி அமைவது உறுதி என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அஇஅதிமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளரும் நாமக்கல் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஸ்ரீதேவி மோகன் இரட்டை இலைக்கு ஆதரவு கேட்டு பொதுமக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
இன்று நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு ஏற்பட்ட பேட்டபாளையம் ஆர் சி பேட்டபாளையம் கிராயூர் நெய்க்காரப்பட்டி பனமரத்துப்பட்டி ராசி பாளையம் குன்னத்தூர் மோகனூர் ஒன்றியம் பேரூராட்சி பகுதிகளில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் இரட்டை இலை சின்னத்திற்கு கொளுத்தும் வெயிலில் மக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டினார் மேலும் பொதுமக்களிடையே அவர் பேசும்போது
கடந்த ஐந்து ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழக அரசு மக்களுக்கு பல்வேறு துன்பங்களை கொடுத்து விட்டு சென்றது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடைக்கிறது கொலை கொள்ளை கஞ்சா போதை இளைஞர்களை நாச வழிக்கு கொண்டு சென்றது இவ்வளவு கேவலமான அரசை நம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் மீண்டும் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அண்ணா திமுக அரசு அமைய வேண்டும்
புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா மாண்புமிகு புரட்சித் தலைவர் எடப்பாடியார் நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக நான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறேன் நீங்கள் என்னிடம் கூறிய ரோடு வசதி குடிநீர் வசதி சாக்கடை வசதி உங்களுடைய அனைத்து கோரிக்கைகளையும் நான் வெற்றி பெற்றவுடன் நிறைவேற்ற பாடுபடுவேன் என்று பொதுமக்களிடையே இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டி பேசினார் மோகனூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அதிமுக முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி தோழமைக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்