வயலூர் ஊராட்சியில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்
சமயநல்லூர்.ஏப்.13-
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள வயலூர் ஊராட்சியில் சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடேசன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவர் பேசியது திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக முதல்வர் வழங்கி வருகிறார் குறிப்பாக கூற வேண்டும் என்றால் மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி மகளிருக்கு விடியல் பயணம் பேருந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முதியோர் உதவித்தொகை விவசாயிகளுக்கு இலவசமின்சாரம்
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இலவச இருசக்கர வாகனம் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது திராவிட மாடல் அரசு தொடரவும் சோழவந்தான் தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்திடவும்
வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் மறந்திடாமல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து அம்பலத்தடி ,சிறுவாலை,செல்லக்கவுண்டன்பட்டி,பிள்ளையார்நத்தம்,வைரவநத்தம்,
சமயநல்லூர் தோடனேரி,மூலக்குறிச்சி, விட்டங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் அவருக்கு பெண்கள் மலர் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.
அருகில் திமுக ஒன்றிய செயலாளர் தனசேகர்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்தசாரதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்பரமேஸ்வரி செல்லமுத்து,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சித்ராதேவிமுருகன்,திமுக கிளைச் செயலாளர்சீனிவாசன்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழாளன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.