கோவை கிராஸ்கட் சாலையில் மெஜஸ்டின் ஜுவல்ஸ் மூன்றாவது கிளை பிரம்மாண்டமாக துவக்கம்
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று தலைமுறைகளாக இயங்கி வரும் மெஜஸ்டின் ஜுவல்ஸ் நிறுவனம், தங்க நகைகள் தயாரிப்பிலும், விற்பனையிலும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமாக செயல்பட்டு வருகிறது..
கோவையின் முக்கிய பகுதிகளான பெரியகடை வீதி மற்றும் ரேஸ்கோர்ஸ் ஆகிய இரண்டு இடங்களில் செயல்பட்டு வரும் மெஜஸ்டின் ஜூவல்ஸ் தனது மூன்றாவது கிளையை ,காந்திபுரம், கிராஸ் கட் சாலையில் துவங்கி உள்ளது…
மூன்று தளங்களுடன் பிரம்மாண்டமாக துவங்கி உள்ள புதிய கிளையின் துவக்க விழா,மெஜஸ்டின் ஜுவல்ஸ் இயக்குனர்கள் முன்னிலையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக, கோவை ஶ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குநர் ,சிவகணேஷ், கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார்…
நிகழ்ச்சியில்,,முதல் விற்பனையை மெஜஸ்டின் நிறுவன இயக்குநர்கள் துவக்கி வைக்க அதனை, வெற்றி விகாஸ் கல்விக் குழுமங்கள் நிறுவனர் குணசேகரன், பெற்று கொண்டார்..
மூன்று தளங்களில் முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் தங்க நகைகளும்,இரண்டாவது மற்றும் மூன்றாம் தளங்களில் வைரம் மற்றும் வெள்ளி நகைளுக்கான கலெக்ஷன்கள் இடம் பெற்றுள்ளன..
முதல் தளத்தை கோவை நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முத்து வெங்கட் ராம் மற்றும் ,இரண்டாம் தளத்தை தமிழ்நாடு ஜுவல்லர்ஸ் கூட்டமைப்பு தலைவர் சபரிநாத், ஆகியோர் திறந்து வைத்தனர் இதே போல , வைர நகைகள் பிரிவினை வில்வா ஜுவல்ஸ்,நிர்வாக இயக்குநர் விஜயகுமார், துவக்கி வைத்தார்…
கோவை கிராஸ்கட் சாலையில் பிரம்மாண்டமாக துவங்கி உள்ள மெஜஸ்டின் ஜுவல்ஸ் நிறுவனத்தில் துவக்க விழாவை முன்னிட்டு ஏராளமான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக மெஜஸ்டின் ஜூவல்ஸ் இயக்குனர்கள் தெரிவித்தனர்…