அலங்காநல்லூர்.ஏப்.13-

மதுரை மாவட்டம் பாலமேட்டில் சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் அவர் பேசியது கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா கொண்டு வந்த திட்டங்களால் மக்கள்நிம்மதியாக வாழ்க்கை நடத்தினர்.

இன்று இந்த ஆட்சியில் ரவுடிசம் கட்டப்பஞ்சாயத்து கொலை கொள்ளை கற்பழிப்பு என தினந்தோறும் தமிழ்நாடு தவித்துக் கொண்டு உள்ளது இதனை காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வராக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளார் அட்டவணங்கள் காக்க வேண்டிய அரசு தவறிவிட்டது கடந்த எடப்பாடியார் ஆட்சியில்மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கினார்

கூட்டுறவு ரேஷன் மூலம் ரூபாய் 2500 தரமான அரிசி சர்க்கரை உள்ளிட்ட பொங்கல்தொகுப்பு வழங்கப்பட்டது.படித்தபெண் பிள்ளை திருமணத்தின் போதுதாலிக்கு தங்கம் 50,000ரூபாய் உள்ளிட்ட திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம் மாசற்ற மணிமகுடமாய் தாய் உள்ளத்தோடு வழங்கியவர் நமது பொதுச் செயலாளர் அவர் என்னை தேர்வு செய்து உங்களிடம் கொடுத்துள்ளார் ஆகையால் எனக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்

அவரை தொடர்ந்து அவரது மனைவி மகாலட்சுமி பேசியது எனது கணவரை ஐயா பழனிச்சாமி அவர்கள் தேர்வு செய்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அவர் குடும்பம் பிள்ளைகள் என்று வாழ தெரியாது பகுதி மக்களுக்காக கடந்த ஐந்து ஆண்டு வாழ்ந்தவர்பல்வேறு இன்னல்கள் இடைஞ்சல்கள் வந்த போதும் துணிவுடன் சந்தித்து செயல்பட்டவர் அவருக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் அதே போல் நான் உங்களிடம் கேட்டுக் கொள்வது ஒன்று மட்டும் தான் இப்பகுதியில் வாழும் அம்மா அக்கா அப்பா அண்ணன்ஆகியோர் நான் இங்கு வந்த போது எனக்கும் மலர் தூவி ஆரத்திஎடுத்தீர்கள் என்மீதும் நீங்கள் கொண்டுள்ள பாசத்திற்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன் வெற்றி பெற்றவுடன் கோட்டையில்ஐயா எடப்பாடி பழனிச்சாமி ஏற்றும்போதுஉங்களின் சட்டமன்ற உறுப்பினராக எனது கணவரும் மாணிக்கத்தை நீங்கள் அனுப்பி வைப்பீர்கள் என்று இருந்தாலும் உங்கள் அனைவரையும் நான் சந்தித்து பேசத்தான் இங்கு வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.இதில் அதிமுக ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் நகர செயலாளர் அழகுராஜ், வி.கே.குமார்,வாடிப்பட்டி டாக்டர் அசோக்குமார், ஒன்றிய துணைச் செயலாளர் சம்பத், பேரூராட்சி துணை தலைவர் ராமராஜ்,நகரப் பொருளாளர்
சுந்தரராகவன், இணைச் செயலாளர் புளியம்மாள், நிர்வாகிகள் சேகர், விஜயகுமார், எஸ்.எஸ்.கண்ணன் குணசேகரன்,திவாகர்,வாடிப்பட்டி வேல்முருகன்,பாஜக மண்டல தலைவர் முனீஸ்வரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *