கம்பம் ஆர் ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் 10 ஆம் ஆண்டு விழா

தேனி மாவட்டம் கம்பம் ஆர் ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் 10 ஆவது ஆண்டு விழா கோலகாலமாக நடைபெற்றது இந்த விழாவிற்கு பள்ளியின் சேர்மன் கல்வி தந்தை ஆர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்

துணை சேர்மன் ஆர் அசோக் குமார் ஆக்டிங் சேர்மன் ஆர் ஆர் ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பள்ளியின் ஆண்டறிக்கையை பள்ளியின் முதல்வர் டாக்டர் பி. ஆனந்தவள்ளி சமர்ப்பித்தார் விழாவில் சிறப்பு விருந்தினராக சினிமா நடிகர் சிறந்த பட்டிமன்ற பேச்சாளர் ஈரோடு மகேஷ் பங்கேற்று பள்ளியில் சிறப்பாக பயின்று வரும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கியும் மாணவர்களுக்கு பல்வேறு அறிவு சார்ந்த கருத்துக்கள் குறித்து சிறப்புரையாற்றினார்

விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. பள்ளியின் மாணவ மாணவிகள் பள்ளியின் கல்வித்தரம் குறித்தும் இந்தப் பள்ளியில் பயின்றால் கல்வியை விட ஒழுக்கத்தையே முதல் பாடமாக கற்பித்து வருவது இந்த பள்ளியின் சிறப்பு என்று மாணவ மாணவிகள் பெருமிதத்துடன் பேசினார்கள். இந்த விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *