இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்

சித்திரை 1, வசந்தகால துவக்கம். நமது வானியல் சாஸ்திரம் அடிப்படையில் புத்தாண்டை சங்க காலம் தொட்டு கொண்டாடி வருகிறோம்.

புதிதாக பிறக்கும் பராபவ வருடத்தை ஏப்ரல் 14ஆம் தேதி வரவேற்போம்.

கோவிலுக்குச் சென்று வழிபட்டு, பெரியோர்கள் நல்லாசி பெற்று உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்வது தமிழர்களாகிய நமது புத்தாண்டு ஆகும்.

ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறி இனிப்பு வழங்கி அன்பை பரிமாறிக் கொள்ளும் விழா.

அதே நேரம் அன்றைய உணவில் அன்று மலர்ந்த வேப்பம்பூவை வெல்லத்தில் கலந்து இனிப்பும் கசப்பும் கலந்த பச்சிடியாக ஏற்போம். வேம்பு இயற்கையான மருந்து ஆகும்.

இத்தகைய பண்பாட்டு சிறப்புமிக்க புத்தாண்டில் இந்த ஆண்டு ஜனநாயக கடமை விழாவாக தேர்தல் இணைந்துள்ளது.

முருகப் பெருமான் நல்லருளால் தமிழகத்தின் இருள்சூழ்ந்த காட்டாட்சி ஒழிந்து, தர்மத்தின் நல்லாட்சி அமையட்டும்.

இந்துக்கள் சுயமரியாதை உடையவர்கள். “மதியாதார் தலைவாசல் மிதிக்காதே” என்று நமது தமிழ் மூதாட்டி ஔவையார் கூறியுள்ளார். இதனை மனதில் நிறுத்தி, வேற்று மதத்தினர், மற்ற மொழியினருக்கும் வாழ்த்து சொல்லி பூரிக்கும் திமுக தலைவர் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொல்ல கசக்கிறது. தமிழர்கள் தம்மை மதிக்காதவர்களுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டும் அதனை நிறைவேற்ற மறுத்தது திமுக அரசு. முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலையை வக்ஃப் வாரிய சொத்து என திமுகவின் எம்எல்ஏ அப்துல் சமது, எம்பி நவாஸ் கனி கூறியதை மறக்க வேண்டாம். தேர்தல் எனும் போரில் வாக்கு என்பதே ஆயுதம். ஜனநாயக வழியில் நம்மை பாதுகாத்துக் கொள்ள சிறந்த வழி தவறாமல் ஓட்டளித்து நமது எதிரிகளை வீழ்த்துவோம்.

வருகின்ற தமிழ்ப் புத்தாண்டில் தமிழகத்தில் நல்லாட்சி அமைய திருப்பரங்குன்றம் முருகன் நல்லருள் புரிவார்.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கும், புத்தாண்டு கொண்டாடும் கேரளா , அருணாசலப் பிரதேசம் உட்பட மற்ற மாநிலத்தவர்களுக்கும் எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துகிறோம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *