கப்பல் கட்டுதளம் இடம் மாற்றம் செய்ய விட்டால் மிகப்பெரிய போராட்டம். அமைச்சர் ஸ்ரீநாத் எந்த முடிவும் சொல்லவில்லை உப்பு உற்பத்தியாளர்கள்.


தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் சுமார் 38 ஆயிரம் கோடி மதிப்பில் கப்பல் கட்டுதளம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் துவக்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. சுமார் 1800 ஏக்கர் இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது மேலும் சில பட்டா இடமும் உள்ளது அதற்கான இழப்பீடு தொகை வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதாக தெரிய வருகிறதுஇதற்கு கோவளம் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் ஆரம்பம் முதல் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் பிரபு தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவளம் உப்பு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்களுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் உப்பு உற்பத்தியாளர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின். தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சுனில் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் இரண்டு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திற்கு பின்பு உப்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில் ஆரம்பம் முதலே கப்பல் கட்டுத்தளம் வேண்டாம் என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம் ஆனால் தமிழக அரசு இதனை கேட்கவில்லை. கடந்த மாதம் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் வந்து உப்பளத்தை பார்வையிட்டார் நான் இது சம்பந்தமாக தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் நம்பிக்கையுடன் இருங்கள் என்று கூறினார் ஆனால் 10 முறைக்கு மேல் தொடர்பு கொண்டு எந்த ஒரு பதிலும் அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவிக்கவில்லை இன்றைய ஆய்வுக் கூட்டத்திலும் எந்த ஒரு உறுதி மொழியும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

உப்பளத்தில் கப்பல் கட்டு தளம் கட்ட ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க முடியாது இதையும் மீறி கப்பல் கட்டு தளம் அமைக்கப்பட்டால் கடுமையான போராட்டத்தை நாங்கள் நடத்துவதற்கு தயங்க மாட்டோம். அதுபோல தொழில் துறை அமைச்சர் கீர்த்தனானவ சந்திக்க நாங்கள் சென்ற போது ஆறு மணி நேரம் காத்திருந்தோம் எங்களை சந்திக்கவில்லை ஆகையால் உடனடியாக தமிழக அரசு விளாத்திகுளம் பகுதியில் தரிசு நிலங்கள் உள்ளது

அங்கு கப்பல் கட்டு தளம் அமைக்க வேண்டும் ஆனால் அதிகாரிகள் மூள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டுதளம் அமைக்கப்படும் உங்களுக்கு வேறு இடம் தரப்படும் என்கிற எண்ணத்திலும் பேசினார்கள் அதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் மூன்று தலைமுறை ஆக இந்த இடத்தில் தான் நாங்கள் உப்பு தொழில் செய்து வருகிறோம். கனிம வளத்தை அழித்து கப்பல் கட்டு தளம் அமைத்தால் அந்த கிராமமே அழிந்து விடும் நாங்கள் அகதிகளாக மாறும் சூழ்நிலை உருவாகிவிடும் அரசுக்கு வருவாய் குறைவாக வருகிறது என்று அரசு நினைத்தால் ஏக்கர் ஒன்றுக்கு 5000 ரூபாய் செலுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்

ஆனால் ஒருபோதும் கப்பல் கட்டு தளம் அமைப்பதற்கு நாங்கள் அனுமதிக்க முடியாது அமைச்சர் ஸ்ரீநாத் நம்பிக்கையுடன் இருங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் நம்பிக்கையுடன் இருந்தால் என்று கூறினார் ஆனால் எதுவும் தற்போது நடைபெறவில்லை ஆனால் மிகப் பெரிய போராட்டத்தை நாங்கள் நடத்த தயாராக இருக்கிறோம் ஆகையால் தமிழக அரசு கப்பல் கட்டு தளம் அமைப்பும் முடிவை மாற்ற வேண்டும் வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் இல்லை என்றால் அதற்கான எவ்வளவு பெரிய போராட்டம் நாளும் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *