திருவாரூர் சுந்தரவிளாகம் அருள்மிகு சுந்தரமூர்த்தி சுவாமிகள் மடாலயத்தில், இன்று 2026 ஜூலை 22 ஆம் தேதி, அருள்மிகு சங்கிலியார் உடனுறை நம்பி ஆரூரர் திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், வேத மந்திரங்கள் முழங்க மங்கள இசையுடன் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு, திருக்கல்யாண வைபவம் ஆகம முறைப்படி நடைபெற்றது. இதில் ஏராளமான சிவனடியார்களும், பக்தர்களும் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.திருக்கல்யாண நிகழ்வில் மங்கள இசை, தீபாராதனை மற்றும் அறுசுவை உணவு அன்னதானம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் பக்தர்கள் சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.