செங்குன்றம் செய்தியாளர்
ஜீலை 22
மாதவரம் போக்குவரத்து போலீசார் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர்.
மாதவரம் ரவுண்டானா அருகே போக்குவரத்து போலீசார் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் சாலை விதிகளை மதித்து வாகனங்களை இயக்கவும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் போக்குவரத்து காவல்துறை துணை ஆணையாளர் ப்ரோஸ்கான் அப்துல்லா போக்குவரத்து உதவி ஆணையர் முருகராஜ் போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் சகாதேவன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் உடனிருந்து சாலையில் செல்லும் தலைக்கவசம் இல்லாமல்ஓட்டிவரும் இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி சாலைவிதிகளை மதித்து ஓட்டவும், தலைக்கவசம் அணியுமாறும், இளம் சிறார்களுக்கு வாகனத்தை இயக்க கொடுக்க வேண்டாம் எனவும் மீறி வாகனம் ஓட்டும் போது போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்வதோடு கடும் அபராதம் விதிக்கப்படும் என அறிவுரைகளை கூறி அவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள். மேலும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.