கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்க் கொள்ள வந்த பொள்ளாச்சி சார் ஆட்சியர் இராமகிருஷ்ணசாமியை நேரில் சந்தித்த வால்பாறை 7 த் ஹெவன் டாக்ஸி உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் சங்கத்தின் சார்பாக சங்கத்தலைவர் எஸ்.ஆர்.எஸ்.சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்
அதில் வால்பாறை பகுதிக்கு அன்றாடம் வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆழியாறு பகுதியில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடியில் இ- பாஸ் வழங்கப்பட்டு வருகிறது இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் அதைத் தவிர்க்க சோதனைச்சாவடிக்கு சிறிது தூரம் தள்ளி இடவசதியுள்ள வளைவு பகுதியில் இ- பாஸ் வழங்கும் மையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி அம்மனுவில் கூறப்பட்டுள்ளது
இந்நிகழ்வின் போது சங்க செயலாளர் பிரபு, பொருளாளர் லாலு, துணைத்தலைவர் பாபு, மக்கள் தொடர்பாளர் சாலமோன் மற்றும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்