கண் மருத்துவச் சேவையில் முன்னணி வகிக்கும் ‘டிரினிட்டி கண் மருத்துவமனை & லாசிக் மையம்’, கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் தனது புதிய கிளையை துவங்கியுள்ளது.
பாலக்காட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டிரினிட்டி கண் மருத்துவமனை நிறுவனம் ,கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக கண் மருத்துவத் துறையில் சேவையாற்றி வருகிறது.
தமிழகம் முழுவதும் தனது கிளைகளை விரிவுபடுத்தி வரும் டிரினிட்டி கண் மருத்துவமனை மையம் கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் தனது புதிய கிளையை துவங்கியது..
இதற்கான துவக்க விழா,மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஏ.கே. ஸ்ரீதரன் ,, நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுனில் ஸ்ரீதர் , தலைமை மருத்துவ இயக்குநர் டாக்டர் மிருதுலா சுனில் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது..
இதில், சிறப்பு விருந்தினராக கோவை ‘ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே. மாதேஸ்வரன் கலந்து கொண்டு புதிய மையத்தை திறந்து வைத்தார்.
6,500 சதுர அடியில் அமைந்துள்ள புதிய டிரினிட்டி கண் மருத்துவ கிளையில் நோயாளர் பதிவு பிரிவு, மேம்பட்ட நோயறிதல் வசதிகள், ஆலோசனை அறைகள், மருந்தகம், கண்ணாடி விற்பனை நிலையம் மற்றும் லாசிக் சிகிச்சைக்கான தனிப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக ,லேசர் மூலம் பார்வை திருத்தும் லாசிக் சிகிச்சை மற்றும் நவீன அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,கோவை மையத்தில் அனுபவமிக்க மருத்துவர்கள் டாக்டர் மதுசூதன் , டாக்டர் முகமது ஷாபாஸ், டாக்டர் ஏ.எம். மும்தாஸ், டாக்டர் பிரேம்ஜித் முரளிதரன், டாக்டர் ஜின்சி மரியா பால், டாக்டர் சிந்து ஜா முருகேசன், டாக்டர் சஞ்சனா எஸ். ஸ்ரீதர் உள்ளிட்ட நிபுணர்கள் குழுவினர் பணியாற்றுகின்றனர்.
புதிய கிளை துவக்கத்தை முன்னிட்டு ஜூன் 15 வரை சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலவச கண் பரிசோதனை ஆலோசனை, இலவச லாசிக் பரிசோதனை, லாசிக் அறுவை சிகிச்சைக்கு 25 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகின்றன. மேலும், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 5 நபருக்கு இலவச லாசிக் சிகிச்சை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.