தேனியில் தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஜ.ஆர் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியை திரும்ப பெற வலியுறத்தி திமுக உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் தேனி நகரில் இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியை special intensive Revision.SIR யை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் என்ராமகிருஷ்ணன் எம் எல் ஏ ஆகியோர் தலைமை வகித்தனர் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் தேனி நகரச் செயலாளர்கள் சூர்யா பாலமுருகன் எம் சி நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை எஸ்.ஜ.ஆர் உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன மேலும் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தை வன்மையாக கண்டிக்கிறோம். என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன
இந்த ஆர்ப்பாட்டத்தில் நகராட்சி நகர் மன்ற தலைவர் தேனி ரேணு பிரியா பாலமுருகன் பெரியகுளம் சுமிதா சிவக்குமார் போடிநாயக்கனூர் ராஜராஜேஸ்வரி சங்கர் கம்பம் வனிதா நெப்போலியன் கூடலூர் பத்மாவதி லோகந்துரை சின்னமனூர் அய்யம்மாள் ராமு பேரூராட்சி மன்ற தலைவர்கள் பூதிப்புரம் கவியரசு பால்பாண்டியன் மேல சொக்கநாதபுரம் கண்ணன் காளி ராமசாமி தென்கரை வி நாகராஜ் தாமரைக்குளம் ச. பால்பாண்டி வீரபாண்டி கீதா சசி தேவாரம் லட்சுமி இளங்கோவன் கோம்பை முல்லை மோகன் ராஜா அனுமந்தன்பட்டி ராஜேந்திரன் புதுப்பட்டி சுந்தரி பாஸ்கரன் ஓடைப்பட்டி வழக்கறிஞர் தனுஷ்கோடி உள்ளிட்ட நகராட்சி நகர் மன்ற கவுன்சிலர்கள் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் திமுக மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் உள்பட இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.