தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறையில் ‘சிறகுகளே துடுப்புமாக’ எனும் தலைப்பில் கவிதை நூல் வெளியீட்டு விழா பனுவல் அரங்கத்தில் நடைபெற்றது.

. நிகழ்ச்சியின் தொடக்கமாக இலக்கியத்துறையின் பேராசிரியர் (ம) துறைத்தலைவர், முனைவர் ஜெ.தேவி பண்பிற்கு இலக்கணமாகத் திகழும் கவிஞரை வாழ்த்தி அவரது கவிதைகளை எடுத்துக்கூறி நோக்கவுரை ஆற்றினார். வந்தோரை வாழ்த்துவது போற்றுவது நம் மரபு அவ்வகையில் சிறப்பு விருந்தினர் மற்றும் பதிப்பகத்தார் ஆகிய இருவருக்கும்இலக்கியத்துறைத்தலைவர் அவர்களும் துறை சார்ந்த பேராசிரியரும் சிறப்பு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் துணைவேந்தர்(பொ) குழு உறுப்பினர், முனைவர் மரு.பெ.பாரதஜோதி தலைமை தாங்கினார். பதிவாளர் (பொ), உயர்திரு கோ.பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலை வகித்தார். . இலக்கியத்துறையின் பேராசிரியர் முனைவர் பெ.இளையாப்பிள்ளை வாழ்த்துரையாற்றினார்.

நூலினை வெளியிட்டு சிறப்பு விருந்தினராக தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் பதிவாளர் தமிழறிஞர் கு.வெ.பாலசுப்பிரமணியன் பேசியதாவது கவிஞரின் பெயரினையும் பொருத்தமான ஆளுமைப்பண்பினையும் எண்ணி வியந்து விவேகானந்தரின் மாணவியை நினைவுகூர்ந்து தம் உரையினைத் தொடங்கினார். மராட்டிய மொழியில் காண்டேகர் எழுதிய கிரௌஞ்சவதம் என்னும் நாவலைப் படியுங்கள். வலியால் இறுகி பாறைபோல மாறிய உங்கள் மனம் கனிபோல் உருகி எண்ணற்ற கவிதைகளைப் படைப்பீர்கள். இழப்பு என்பது சாதாரண ஒன்றல்ல. அதிலும் தாய், தந்தையை இழப்பது மிகக்கொடியது. வருத்தம் வேண்டாம் இறந்தாலும் அவர் எப்போதும் உங்களுடனே இருப்பார்.என்றார்

இலக்கியத்துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் இரா.தனலெட்சுமி கூறுகையில் தெளிந்த நல்நீரோட்டம் போல் அமைதியாக தன் வழியில் பயணிப்பவர்தான் கவிஞர் அவர்கள் தான் என்று கூறினார்.

இந்நூலின் படைப்பாளர் செல்வி செ.ச.நிவேதா பேசுகையில்
கவிஞரின் ஏற்புரையாக… பெற்றெடுத்தத் தாய், வளர்த்தெடுத்த தமிழ்த்தாய் என் வளர்ச்சிக்குத் துணையாக இருந்த இரு தாய்களின் பெருமைகளையும் வாய்ப்பாகக் கிடைத்த மேடைப் பேச்சுகளில் வெளிப்படுத்தினேன். நான் தமிழ்ப் படித்ததற்கு மறுப்பு தெரிவித்த ஒவ்வொருவருக்கும் கூறும் பதிலடியாக இப்படைப்பு அமையும்.என்றார்.

இலக்கியத்துறை ஒருங்கிணைந்த முதுகலை ஐந்தாமாண்டு மாணவி செல்வி செ.லத்திகா வரவேற்றார்.
நிறைவில் ஒருங்கிணைந்த முதுகலை ஐந்தாமாண்டு மாணவி செல்வி ச.துர்காதேவி நன்றி கூறினார்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *