தாம்பரம் மேற்கு பகுதியில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் கூறி வாக்கு சேகரிப்பு*

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கழக வேட்பாளராக போட்டியிடும் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன், தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

மேற்கு தாம்பரம் பகுதிகளில் வாகன பிரச்சாரம் மற்றும் நடந்து சென்றும் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களால் அறிவிக்கப்பட்ட கழகத் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்ததை பொதுமக்களிடம், பெண்களிடமும் எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் அப்பொழுது புரட்சி தமிழர் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைத்தவுடன் பெண்களுக்கு மாத ஊக்கத் தொகை ரூ2000, குடும்பத்துக்கு பத்தாயிரம் ரூபாய், விலையில்லா பிரிட்ஜ், ஐந்து லட்சம் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் ரூபாய் 25,000 மானியத்துடன் வழங்கப்படும் எனவும் இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருடன் தாம்பரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ ப.தன்சிங், அம்மா ம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ம.கரிகாலன், பாஜக தேர்தல் இணை பொறுப்பாளர் சுபாஷ் குமார், பாமக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கருப்புசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் வேணுகோபால், கழக மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் செம்பாக்கம் ஜி.எம்.சாந்தகுமார்,மாவட்டக் கழகப் பொருளாளர் பி.கே.பரசுராமன், தாம்பரம் கிழக்கு பகுதி கழகச் செயலாளர் எம்.கூத்தன்,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் மாரி, மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் அமுதா,சுபாஷினி, மார்க்கெட் பாபு, பகுதி கழக தலைவர் டிரிபிள் எக்ஸ்.சிவா, தாம்பரம் மாநகராட்சி மன்ற உறுப்பினர் ஸ்டார் பிரபா, பகுதி பொருளாளர் பி.மோகன் மாவட்ட பிரதிநிதிகள் இ வெங்கடேசன் எம்.கார்த்திக் வட்டக் கழக செயலாளர் ஜெ.மாரி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சேர்ந்த கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர், கூட்டணி கட்சித் தொண்டர்கள் புடை சூழ நடைபெற்ற வாகன பிரச்சாரத்தில் மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாம்பரம் மேற்கு பகுதி கழகச் செயலாளரும் முன்னாள் நகரமன்ற துணை தலைவருமான ஏ.கோபிநாதன் செய்திருந்தார்.

மேலும் இக்கூட்டத்தில் தாம்பரம் கிழக்கு பகுதி செயலாளர் எம் கூத்தன் மத்திய பகுதி செயலாளர் எல்.ஆர் ன.செழியன் மாமன்ற உறுப்பினர் ஸ்டார் பிரபா, வட்டக் கழகச் செயலாளர் மாரி உட்பட நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *