மதுரையில் 100 சதவிகித வாக்களிப்பை உறுதிப்படுத்த ஆயுதப்படை காவலர்கள் பாது காப்பு ஒத்திகையை நடத்தினர்.

மாநகர காவல் ஆணையர் அபிஷேக் தீக்சித் உத்தரவின் பேரில், சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதிப்படுத்தபாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.

மாநகர ஆயுதப்படை காவல் துணை ஆணையர் திருமலைக்குமார் முன்னிலையில் நடந்த ஒத்திகையில் ஆயுதப்படை காவலர்களுக்கு தேர்தல் நேரத்தில் ஏற்படும் வன் முறைகள், வாக்குச்சாவடியை கைப்பற்றுதல் போன்ற அசம்பாவிதங்களை தடுப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.


தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள், பொதுமக்கள். வயதானவர்களிடம் பொறுமையுடனும், மரியாதை யுடனும் நடந்துகொள்ள வேண்டுமென காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது…..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *