கோவை

தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் நிறுவன தலைவரும் அதிமுக ஆதரவாளருமான பழ கருப்பையா காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாடு தேர்தல் ஒரு மாறுதலை நோக்கி நிற்கின்ற தேர்தல் என்றும் நீதி கட்சி காலத்தில் துவங்கிய இந்த திராவிட இயக்கம் ஸ்டாலினோடு முடிவடையும் என்பதை இந்த தேர்தல் மெய்ப்பிக்கும் என தெரிவித்தார்.

கிரிமினல்களை மந்திரியாக ஆக்குகின்ற போக்கு இதுவரை நீதி அரசியலில் நடந்தது இல்லை என்றும் அது நீதி அரசியலே எதிர்பார்த்து இருக்காது என்று குறிப்பிட்டார். இது பற்றி எந்த ஒரு குறிப்பு அரசியல் சாசனத்தில் இல்லை என்று தெரிவித்தார். செந்தில் பாலாஜி பல்வேறு ஊழல்களை செய்துள்ளார் நீதிமன்றம் சென்று தற்பொழுது கோவையில் களம் காண்கிறார் என்று தெரிவித்தார்.

செந்தில் பாலாஜியை மந்திரி ஆக்குவதில் அரசியல் சட்டத்தில் இல்லாத ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார் என்றும் கவர்னர் கதவைப் பிரமாணம் செய்து வைக்காமலேயே அவரை மந்திரி ஆக்கியுள்ளார் என்று தெரிவித்தார்.

ஒரு கிரிமினல் மந்திரி ஆவான் என்று அம்பேத்கர் நேரு பட்டேலுக்கும் கூட தெரிந்திருக்காது என்று கூறினார். ஸ்டாலின் காலத்தில் கிரிமினல்களே நாடை ஆளுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். இந்த அரசாங்கம் நீடித்தால் அரசியல் சாசனம் கைவிட்டு போய்விடும் என்றும் தெரிவித்தார்.

இதனால் எடப்பாடி பழனிச்சாமி இந்த இடத்திற்கு வர வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது என்றும் தெரிவித்தார். சசிகலா எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக்கினார் அப்படி இருக்கும் பொழுது எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டிற்கு விசுவாசமாக இருந்தாரா என்று தான் சசிகலா கேள்வி எழுப்பி இருக்க வேண்டும் என்றும் ஆனால் தனக்கு விசுவாசமாக இல்லை என்று தான் எடப்பாடி பழனிச்சாமி கூறுவதாக குறிப்பிட்டார். சசிகலா அரசியல் வாழ்க்கையில் செய்த ஒரே நல்ல விஷயம் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்கியது தான் என்று தெரிவித்தார்.

மேலும் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார். 100 நாள் வேலை திட்டம் தொடர்பாக பேசிய அவர் 40% மாநில அரசு நிதி தர வேண்டும் என்பதற்கே ஸ்டாலின் ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார். தமிழ்நாடு பசுமை அடைவதற்கு மோடியின் திட்டங்கள் பலன் அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

நடிகர் விஜயின் அரசியல் வருகை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் சர்க்கார் படத்தின் திட்டங்களை தான் இவர் அவருடைய திட்டங்களாக சொல்லி செயல்படுத்தி வருவதாகவும் விஜயுடன் நடிப்பு ரீதியில் நல்ல பழக்கம் உள்ளது அவருக்கு வில்லனாக நடித்ததால் அரசியலிலும் வில்லனாக இருக்கிறேன் என்று சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.

அரசியலைப் பொருத்தவரை விஜய்க்கு எதுவும் தெரியவில்லை என்றும் அவருக்கு செய்தித்தாள் படிக்கின்ற பழக்கம் கூட இருப்பதாக தெரியவில்லை என்றார். நாடு , நாட்டின் வரலாறு, நாட்டு மக்களின் தேவை, பாகுபாடு, இட ஒதுக்கீடு, யாருக்காக பேச வேண்டும் என்பது கூட அவருக்கு தெரிவதில்லை என்று கூறினார்.

அவருடன் உள்ள புஜ்ஜி ஆனந்த்க்கு ஒன்றும் தெரியாது, ஆதவ் அர்ஜுனாவையும் விமர்சித்தார். விஜய் அறிவித்த மாமன் சீர்திருத்தம் குறித்து பேசிய அவர் இந்த முறை வைத்து பேசுவதெல்லாம் சீமான் கற்றுக் கொடுத்தது என்று கூறினார்.

விஜய் தமிழ்நாடு நான்தான் நான்தான் தமிழ்நாடு என்று கூறிக் கொண்டிருப்பதாகவும் பாரதியாரே வள்ளுவன் தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்றுதான் பாடியுள்ளார் அப்படி என்றால் விஜய் என்ன வள்ளுவரா? வள்ளுவர் கருத்து விஜயா இதெல்லாம் அசிங்கம் பிடித்த பேச்சு என்று குற்றம் சாட்டினார்.

பேருந்து பயணம் இலவசம் திட்டம் தொடர்பான கேள்விக்கு தற்பொழுது மகளிர்க்கு அளித்த இலவச மகளிர் பேருந்து திட்டத்திலேயே 48 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் புதிய கருத்தோட்டங்கள் இல்லை என்றும் சினிமா ரசிகர்கள் தான் விஜயை தலைவராக நினைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் விஜய்க்கு வாக்களிப்பது ஒன்றுமே ஆகாது என்றும் ஆனால் திமுக வாக்குகள் சில பாதிக்கக்கூடும் என்று கூறினார். மாற்று அரசு வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிமுகவை தான் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் கூறினார்.

எம்ஜிஆர் அரசியலுடன் பயணித்து தனியாக கட்சியை ஆரம்பித்தவர் என்றும் ஆதனால் அவருக்கு அரசியல் அனுபவம் அறிவு எல்லாம் இருந்தது என்று சுட்டிக்காட்டிய அவர் அதனால்தான் அவருடைய ஆட்சி இன்றுவரையிலும் சிறந்த ஆட்சி என்று மக்களால் கூறப்படுகிறது எனவே எம்ஜிஆர் ஆட்சி என்பது வேறு விஜய் அவர் வேறு எம்ஜிஆர் உடன் விஜயை ஒப்பிட்டு கூற முடியாது என்று தெரிவித்தார்.

மேலும் விஜயின் அரசியல் தள்ளுபடி அரசியல் என்றும் விமர்சித்தார். தமிழக வெற்றி கழகத்தில் உள்ள செங்கோட்டை எனும் சிறைக்குச் சென்று வந்தவர் தான் என்றும் அவர் ஒன்றும் சுதந்திரப் போராளி அல்ல எனவே அவர் கூறும் மெய்ப்பிக்க முடியாத பேச்சுக்களுக்கு விடை சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.

அதிமுகவுடன் விஜய் சேருவதற்கு விருப்பம் இல்லை என்றால் அது விஜயின் விருப்பமாக இருக்கும் ஆனால் விஜய் சார்ந்து அதிமுக இல்லை என்றார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக சிறுபான்மையினருக்கு எதிரானவர் அல்ல என்றார். ஸ்டாலின் அவருக்கு விசுவாசமான கட்சியினரை மட்டும் வைத்துக்கொண்டு அதிலும் அவருக்கு விசுவாமான ஆட்களுக்கு மட்டும் பதவிகளை வழங்கி வருவதாகவும் கூறினார்.

விஜய் தான் எப்பொழுது பார்த்தாலும் போட்டி திமுக மற்றும் தவெக விற்கும் எனக்கு கூறிக் கொள்கிறார் ஆனால் ஸ்டாலின் விஜயை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் கனவில் வந்து மிரட்டுகிறார் என்று தெரிவித்தார். விஜய் தான் ஸ்டாலின் தனக்கு எதிரி என்று கூறிக் கொள்கிறார் ஆனால் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமியை தான் எதிரியாக குறிப்பிடுகிறார் என்றும் தெரிவித்தார்.

விஜயகாந்த் பெற்ற வாக்கை தான் விஜய்யும் பெறுவார் என்றும் விஜயகாந்த் தேர்தலில் மூன்றாவது அணியாக நிற்கும் பொழுது 12, 13 சதவிகிதம் வாக்குகள் அவருக்கு சென்றது அதனுடன் விஜயகாந்த் அரசியலும் ஓய்ந்தது அதன் பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டார் பின்னர் அவரது கட்சி அரை சதவீதமானது அந்த அரை சதவிகிதத்திற்கு தான் தற்பொழுது திமுகவில் இடம் வழங்கியுள்ளார்கள், அன்று 13 சதவிகித வாக்குகளுடன் உச்சகட்டத்தை விஜயகாந்த் தொட்டார், இதே வாக்கு சதவீதத்தை முயன்றால் விஜய்யும் தொட முடியும் என்றார்.

தமிழ்நாட்டு மக்கள் எப்பொழுதும் தனி பெரும் ஆட்சியை தான் விரும்புகிறார்கள் என்றும் அது மாற வேண்டுமென்றால் அதைப் பற்றி தேர்தலுக்குப் பிறகு சிந்திக்கலாம் என்று தெரிவித்தார். பாஜகவின் இந்துத்துவா கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் கூட மோடியின் ஆட்சி சமீப காலத்தில் மிக சிறப்பாக நடக்கிறது என்பதுதான் என்னுடைய கருத்து என்றும் கூறினார். ஈரான் ஒரு வரும்பொழுது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் விலைவாசி உயர்ந்த பொழுதிலும் மோடி இந்தியாவில் விலை உயராமல் அரசே அந்த செலவினங்களை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.

விஜய் என்னிடம் யோசனை கேட்டால் அதிமுகவுடன் இணைய தான் சொல்வேன் என்றும் கூறினார். ரசிகர்களை அவதான முறையில் பின் தொடர வேண்டாம் என்று ரஜினி கூறியது நல்ல கருத்து தான் என்றும் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *