தாம்பரம் மாநகராட்சி 62வது வட்டப் பகுதியில், தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திறந்த வெளி வாகனத்தில் பகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், பொதுமக்களை நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கோரினார்.


இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியின் போது, ஐ.டி. விங் நிர்வாகி விநாயகமூர்த்தி ஏற்பாட்டில் செல்லியம்மன் கோயில் தெருவில் வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் திரளாகக் கூடிவந்து உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர்.


மேலும், வட்ட செயலாளர் எம். வசந்த் தலைமையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரனுக்கு சந்தன மாலை மற்றும் மலர் கிரீடம் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வட்ட பிரிதிநிதி ரமேஷ்,62 வது மேற்கு அவைத்தலைவர் சரவணன்,62,மேற்கு வட்ட செயலாளர் கண்ணப்பன் ஆகியோர் சிறப்பான வரவேற்ப்பு அளித்தனர்.

அப்போது சீனிவாசன்,திருமாறன்,சுரேஷ்,சண்முகம்,கிருஷ்ணமூர்த்தி,பாபு, ஆறுமுகம்,சந்திரன்,காசி,யுவராஜ்,வைத்தியநாதன்,ரஜிகுமார்,ஜெகன்,மாரியப்பன்,அமுல்ராஜ்,மணிகண்டன்,தேவா,தங்கராஜ்,சிவகுமார்,புருஷோத்தம்மன்,சௌந்தரராஜன்,மீன்கார்கிருஷ்ணமூர்த்தி,வசந்திபாலு,கலா,செல்வி,பிரபாகரன்,புனிதன்,ராமச்சந்திரன்,கஜேந்திரன்,சுசிந்திரன்,பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *