தமிழ்நாட்டில் முதல்முறையாக பசுமை தேர்தல் முறை பாப்பிரெட்டிப்பட்டியில் அறிமுகம்-தேர்தல் அதிகாரி தகவல்
.
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரிகள் தலைமையில் தேர்தலில் களம் காணும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு வாக்கு பெட்டி இயந்திர செயல்பாடுகள் குறித்து விவரிக்கும் கூட்டம் நடைபெற்றது

இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் மற்றும் தேர்தலில் நிற்கக்கூடிய சுயேச்சை வேட்பாளர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்..

கூட்டத்தில் வாக்கு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டது

இன்று தேர்தல் மேற்பார்வை அதிகாரி மருத்துவர் ஹரிலால் தெரிவிக்கையில்

தமிழகத்தில் முதல்முறையாக அதுவும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் பசுமை தேர்தல் என்னும் கிரீன் எலக்சன் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது, அதன்படி 10 வாக்குச்சாவடி மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த வாக்குச்சாவடியில் இயற்கையான பச்சிலைகள், செடிக் கொடிகளை கொண்டு கொட்டகைகள் அமைக்கப்படும் பிளாஸ்டிக் இல்லாமல் , மண் பாண்டங்கள் பாத்திரங்கள் பயன்படுத்தப்படும், குடிநீர் குவளைகள் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் குவளைகள் பயன்படுத்தப்படும், முதலில் வரக்கூடிய வாக்காளர்களுக்கு மரம் வளர்க்கும் ஆவலை தூண்டும் வகையில் செடி வழங்கப்படும் என தெரிவித்தார்

ஏற்கனவே தாம் தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற பகுதிகளில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதாகவும், தமிழ்நாட்டில் முதல்முறையாக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது இந்த திட்டத்திற்கு அனைத்து கட்சி பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் ..

இந்தக் கூட்டத்திற்கு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் தொகுதி தேர்தல் அதிகாரி கோவிந்தன், துணை தேர்தல் அதிகாரி பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியரும் துணை தேர்தல் அதிகாரியுமான பார்வதி மற்றும் பல தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *