திருவாரூர் செய்தியாளர்,வே, செந்தில் குமார்
மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா அவர்களை ஆதரித்து பிரச்சார உரையாற்றினார்.
கல்வி, நிதிப்பகிர்வு, மாநில உரிமைகள் என ஒவ்வொன்றிலும் தமிழ்நாட்டை வச்சித்து, பல்வேறு கூறுகளால் நம் மாநிலத்தை துண்டாட துடிக்கும் பாசிக சக்திகளிடமிருந்து நம் மண்ணை காத்திட வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளதாக கூறி வாக்குகள் சேகரித்தார்.
கழக மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பெரும் எழுச்சியுடன் கலந்துகொண்டனர்.