மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை கண்டித்து துறையூர் திமுக கூட்டணி சார்பில் நகல் எரிப்பு போராட்டம்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் கலைஞர் சிலை முன்புறம் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் தொகுதி மறு வரையறை சட்டத்தை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
அதில் நகர செயலாளர் மெடிக்கல் முரளி, நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம்,ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை,வீரபத்திரன், சிவ சரவணன், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ் குமார்,சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் அம்மன் பாபு,பொதுக்குழு கிட்டப்பா, மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், கார்த்திகேயன், பொருளாளர் டைலர் சீனிவாசன், ரெங்கநாதபுரம் கார்த்திக், உமாபதி, மாவட்ட ஐடி விங் சேகர், மீசை பாலு, மாணவரணி பிரபாகரன், காங்கிரஸ் நகர தலைவர் இராமநாதன், வட்டார தலைவர் அரவிந்தன், நகர்மன்ற உறுப்பினர் சுதாகர், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கீரம்பூர் முத்து துரை, ஒப்பந்ததாரர் வினோத்,நகர நிர்வாகிகள் மோகன், செல்லதுரை, சசிகுமார், நல்லுசாமி,நெடுஞ்செழியன், பிரேம், ஆட்டோ மணி,மு.ஒ.க. சதீஸ்குமார், தமிழ் புலிகள் ராஜா மற்றும் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெ நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்