நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பை கைவிட வலியுறுத்தி கும்பகோணத்தில் திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் ஆயிரம் கருப்பு பலூன்களை பறக்க விட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான சட்ட மசோதா நகலை எரித்தும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
நாடாளுமன்ற மறு சீரமைப்பினால் வட மாநிலங்கள் பலன் பெறும் தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கும் இந்திய அளவில் குடும்ப கட்டுப்பாட்டை தீவிரமாக அமல்படுத்தியது தமிழ்நாடு இதன் விளைவாக தமிழகத்தில் மக்கள் தொகை கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டது .
தற்போது மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்படும் என்ற தகவலால் இந்தியாவில் கடுமையாக பாதிக்கப்படும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது
கும்பகோணத்தில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் நூற்றுக்கணக்கான திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் ஒன்று கூடி கருப்பு சட்டை, கருப்பு கொடி ,1000 கருப்பு பலூன்கள், என எங்கும் கருப்பு மயமாக ஊர்வலமாகச் சென்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருப்பு பலூன்களை பறக்க விட்டனர்.
ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு ஆதரவு கொடுக்கும் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது .
மேலும் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான மசோதா நகலினை எரித்தும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர் இதனால் கும்பகோணம் நகரில் பரபரப்பான சூழல் நிலவியது