திருவாரூர் செய்தியாளர் வே செந்தில் குமார்
திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டி.கலைவாணன் குதிரை வண்டி ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் தமிழகத்தில் சட்டமன்ற வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது இதன் தொடர்ச்சியாக திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் மூன்றாவது முறையாக போட்டியிடும் திமுக மாவட்ட செயலாளரும் வேட்பாளருமான பூண்டி. கலைவாணன் இன்று திருவாரூர் ஒன்றிய பகுதிகளான புதுப்பத்தூர், தப்பலாம்புலியூர், வாஞ்சியூர், அலிவலம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது குதிரை வண்டி ஓட்டியபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் உற்சாகமாக ஆள் உயர மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தேவா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.