தஞ்சை சட்டமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முரளிதரன் தனது சூறாவளி சுற்றுப்பயணத்தை வியாழக்கிழமை மாலை 7:00 மணி அளவில் தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் உள்ள சுற்றியுள்ள வீதிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் படைச்சூழுவுடன் இரண்டு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று ,அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, வைரம் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்,அப்போது அவர் பேசியதாவது தங்களது தொகுதிக்குத் தேவையான திட்டங்கள் மற்றும் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பட்டியலுடன் பேசினார்.குறிப்பாக, குடிநீர் தட்டுப்பாடு, சாலை வசதி மற்றும் உள்ளூர் மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்வு காண்பேன் என்றார்.
இதில் தொகுதி பொறுப்பாளர்கள்,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.